Ads (728x90)

நாடாளுமன்றில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது கட்டடங்களை மீண்டும் ஆக்கிரமிக்கவோ எந்த வகையிலும் போராட்டக்காரர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் பதில் ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்களை நடத்துவதற்கோ இடையூறாக இருக்காதீர்கள். ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

எப்பொழுதும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget