அதன் பிரகாரம் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைத்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தெரிவுக்கான பெயர் பிரேரிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டிய நேரத்தில் எமது தலைவர் சஜித் பிரேமதாச ஒரு அடி பின்னுக்கு சென்று, நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை வாபஸ் பெற்றுக்கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் அழக்கப்பெருமவை சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக பிரேரித்தார் என்றார்.
நாங்கள் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றையே அமைக்க இருக்கின்றோம். சர்வ கட்சி அரசாங்கத்தின் ஆரம்ப திட்டங்களுக்கான நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு முன்னர் ஆரம்பித்திருக்கின்றோம்.
மக்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டத்தையே அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அமைச்சரவை ஒன்றை அமைப்பதே எமது திட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment