இன்றையதினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பகல் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்த குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment