ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ளார் என செய்தி வெளிவந்துள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணப்படும் நிலையில் பொலிஸாரும், படையினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
Post a Comment