Ads (728x90)

உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். 

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்த ஒப்பந்தம் உலகளாவிய உணவு நெருக்கடியை குறைக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

ரஷ்யாவும், உக்ரைனும் உலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கருங்கடலை ரஷ்ய கடற்படை முற்றுகையிட்டது. இதன் விளைவாக உக்ரைனின் ஏற்றுமதி போருக்கு முந்தைய மட்டத்தில் ஆறில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.

இதனால் உலகளவில் உணவுப் பஞ்ச அபாயம் ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் ஏழை நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையை சரி செய்ய துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், ஐ.நா செயலாளர் ஆகியோரின் முயற்சியில் ரஷ்யா, உக்ரைன் இடையே உணவுப்பொருள் விநியோக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget