2020ஆம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த படமாக 'சூரரைப் போற்று' தமிழ்ப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்காக சூரரைப் போற்று பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கும் சூரரைப் போற்று திரைப்படம் தெரிவாகியுள்ளது.
சூரரைப் போற்று திரைப்படம் மொத்தமாக 5 விருதுகளைப் பெற்றுள்ளது.
Post a Comment