Ads (728x90)

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத்  தலைவராக திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது பழங்குடியின பெண் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவராக தெரிவாகியுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட  64 வயதான திரௌபதி முர்மு 2015 முதல் 2021 வரை ஜார்கண்டு மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget