ஐரோப்பிய ஒன்றியம் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற சக்தியைப் பயன்படுத்துவதையும் கண்டித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஒரு நிலையான பாதையில் கொண்டு செல்வதற்காக சீர்திருத்தங்களின் கட்டமைக்கப்பட்ட திட்டத்தை விரைவாக நிறுவுதல் மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் அதேவேளையில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மக்களுக்கு பல வருடங்களாக 1 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Post a Comment