Ads (728x90)

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் இலங்கை இடையிலான உறவு பாரம்பரியமானதும், நட்புடன் கூடியதுமாகும் எனத் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர் எனும் வகையில் பல்வேறு துறைகளிலும் நாட்டு மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட ஆக்கபூர்மான இரு தரப்பு  உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிராந்தியத்தின் உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பணிகளிலும் வெற்றி பெற வேண்மென வாழ்த்துவதாக விளாடிமிர் புட்டின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget