சேவைக்கு சமூகமளிக்கும் போது அரசாங்க அதிகாரிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டு நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னவினால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தவறாக பயன்படுத்தி கடமைக்கு சமூகமளிக்கக்கூடிய அதிகாரிகள், கடமைக்கு சமூகமளிக்காத நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் இணையவழியாக முடியாத கடமைகளை நடத்துவதற்கு தேவையான பணியாளர்களை அழைப்பதை இந்த சுற்றறிக்கை தடுக்காது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment