Ads (728x90)

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாதம் முதல் 7,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. 

உலக வங்கியின் நன்கொடை 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடை 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும் இதற்காக ஒதுக்கப்படவுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ ரீதியான உதவிகள் தேவைப்படுவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget