Ads (728x90)

நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய மூவரின் பெயர்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தினேஷ் குணவர்தனவினால் முன்மொழியப்பட்டுள்ளதுடன், மனுஷ நாணயக்கார அதனை வழிமொழிந்துள்ளார்.

அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் முன்மொழிந்த நிலையில், ஹரினி அமரசூரியவினால் வழிமொழியப்பட்டுள்ளது. 

இதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இந்தநிலையில் புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து தாம் விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget