இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும் எனவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை அதிகாரிகள் இந்த வன்முறை நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் நுழைவதை தடுக்ககூடாது. பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதை தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது
Post a Comment