நாட்டின் நிலமை வழமைக்குத் திரும்பியுள்ளதால் வியாழக்கிழமை காலாவதியாகவிருக்கும் அவசரகாலச் சட்டங்களை நீடிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஜூலை 18ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை ஒரு மாதகாலம் நீடிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இது எதிர்வரும் 18ஆம் திகதி காலாவதியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment