Ads (728x90)

சிறுநீரக நோய்க்குக் காரணமானது என தடை செய்யப்பட்டிருந்த 'கிளைபொசேட்' (Glyphosate) எனும் களை நாசினியை இறக்குமதி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் அரசு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

இம்மாதம் 05ஆம் திகதியிலிருந்து மேற்படி களை நாசினிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கிளைபொசேட் பூச்சிக்கொல்லி இறக்குமதிக்கு பதிவாளரின் பரிந்துரையின் கீழ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவித்ததைத் அடுத்து கிளைபொசேட் உள்ளிட்ட இரசாயன நாசினிகள் மற்றும் யூரியா உரம் போன்றவற்றுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.




Post a Comment

Recent News

Recent Posts Widget