Ads (728x90)

வடக்கு மாகாணத்தின் பூநகரி மற்றும் மன்னாரில் 500 மில்லியன் டொலரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் இந்தியாவின் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான தற்காலிக ஒப்புதலை இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கியுள்ளதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளின் நேற்றைய சந்திப்பில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனம் மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட 2 காற்றாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் டொலர் முதலீடு செய்ய தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார சபை சட்டத் திருத்தங்களால் தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்கள் அடுத்த வாரம் மின் கொள்வனவு உடன்படிக்கைகளில் நுழையவுள்ளன. மற்றைய திட்டங்கள் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget