இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விமானம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 சமுத்திர கண்காணிப்பு விமானமே இவ்வாறு இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு இவ்வாறான மூன்று விமானங்கள் கையளிக்கப்படவுள்ளதுடன் அதில் முதலாவது விமானமே நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பாதுகாப்பு படைகளில் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த டோனியர் ரக விமானத்தின் மூலம் இலத்திரனியல் போர் நடவடிக்கைகள், சமுத்திர கண்காணிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகளுக்காக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment