அதற்கமைய 15 ரூபாவாக காணப்பட்ட சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது. பதிவுத் தபால் கட்டணம் 30 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அஞ்சல் சலுகை கட்டணமும் 20 கிராமுக்கு 12 ரூபாவாக காணப்பட்ட குறித்த கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தினால் பொறுப்பேற்கப்படும் கொழும்பு 1 முதல் 15 வரையான பிரதேசங்களுக்கு இடையிலான கடிதங்களுக்கான கட்டணம் 12 ரூபாவிலிருந்து 30 ருபாவாக திருத்தப்பட்டுள்ளது.
10 ரூபாயாக இருந்த தபால் அட்டையின் விலை 20 ரூபாவாகவும், ஒரு நாள் தபால் அடையாள அட்டை சேவை கட்டணம் 100 ரூபாவில் இருந்து 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment