Ads (728x90)

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் மக்களுக்கு இலங்கை மின்சார சபை 28 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக சூரிய சக்தி கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய மின்சார நெருக்கடிக்குத் தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், அவ்வாறு செய்திருந்தால் மின்வெட்டை மிகக் குறைந்த காலப்பகுதிக்கு செய்திருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் சூரிய சக்தி அமைப்புகளை சேர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் செலவிடப்படாது என்றும், முதலீட்டுச் செலவை மின்சார நுகர்வோர் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தியாளர்களாக மாறியுள்ள மின்சார நுகர்வோர் தேசிய மின் கட்டமைப்பிற்கு 600 மெகாவாட் மின்சாரத்தை மேலும் சேர்ப்பார்கள் என்றும் சூரிய சக்தி கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை போதுமானதாக இல்லை என்றும் அதை உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget