Ads (728x90)

உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜேர்மனியில் 24 ஆம் திகதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

லோயா் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம் 04 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. ரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகின்றது.

இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் ரயில்களுக்கு மாற்றீடாக புவியை வெப்பமாக்கும் வாயுக்களை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

9.3 கோடி யூரோ செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 தொன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Post a Comment

Recent News

Recent Posts Widget