Ads (728x90)

சாதாரண பஸ் கட்டணத்தை இன்று முதல் 11.14 வீதத்தால் குறைக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து 34 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. 

கோவிட் காலப்பகுதியில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டமையால் 20% பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும்,  தற்போது வழமை போல் அதிகளவான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் சாதாரண பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget