Ads (728x90)

தமது உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தடையாக இருக்கக் கூடாது என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெங் வென்பின்  தெரிவித்துள்ளார்.

"யுவான் வேங்-5 கப்பல் இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கவலைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

யுவான் வேங்-5 கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது வழக்கமான சர்வதேச நடைமுறையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சில நாடுகள் கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதும், அதன் உள் விவகாரங்களில் மொத்தமாக தலையிடுவதும், பாதுகாப்புக் கவலைகள் என்று கூறுவதும் முற்றிலும் நியாயமற்றது என்றும் கூறியுள்ர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget