ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல வருட தவறான நிர்வாகம், மனித உரிமை மீறல்களின் பின்னர் இலங்கை அரசியல் பொருளாதார மனித உரிமை நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ளது.
உரிய சமூக பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் காணப்படும் ஊழலிற்கு தீர்வை காண்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களை நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
அதேவேளை கருத்து சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் ஆயுதப்படையினரின் துஷ்பிரயோகத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.
மிக கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஆர்ப்பாட்ட தலைவர்களை அரசியல் நோக்கத்தின் கீழ் கைது செய்வது, செயற்பாட்டு குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண உதவாது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
Post a Comment