ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் 06 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 316 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 06 அமைப்புக்கள் மீதான தடையே நீக்கப்பட்டுள்ளது.
முன்னைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களை தடை செய்து இருந்தன.
முன்னைய நல்லாட்சி அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment