Ads (728x90)


நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தவிர்ந்த அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதிகளையும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அனுப்பியுள்ளது. இப்பட்டியலில் 2500 க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


Post a Comment

Recent News

Recent Posts Widget