Ads (728x90)

இலங்கையில் சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தெற்காசிய இயக்குனர் ஜோர்ஜ் லாரியா-அட்ஜெய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில் மந்தபோசனையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தமது புதிய அறிக்கையில் யுனிசெவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

நாடளாவிய ரீதியில் சுமார் 2.3 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 5.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாகவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள 570,000 முன்பள்ளி மாணவர்களில் 127,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget