Ads (728x90)

கொழும்பு 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டப் பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு மக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். என்பதுடன் அமைதிவழிப் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு அடக்குமுறை உத்திகளையோ அல்லது படையினரையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.

உரிமைகள் மீது மட்டுப்பாடுகளைப் பிரயோகிக்க வேண்டிய அவசியதேவை எதுவும் இல்லாத நிலையில், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது உரிமையைப் பயன்படுத்தியமைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அனைவரையும் விடுவிப்பதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நீக்கிக்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. 



Post a Comment

Recent News

Recent Posts Widget