ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினர் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அவர்கள் நீதியமைச்சர் மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய நபராக ரொனிமுங்கொவன் காணப்படுவார் எனவும், அவர் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கவுள்ளார். மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகி ஒக்டோபர் 07ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment