''புதிய சக்தி – இளைஞர் சக்தி மீண்டும் கொழும்பிற்கு'' என்ற தொனிப்பொருளில் இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்ட பேரணி செல்வதற்கு முற்பட்ட நிலையில் அதற்கு பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பௌத்த பிக்குகளும், நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment