Ads (728x90)

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கு பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேந்திர ராகவன் தெரிவித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்களை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், பட்டங்களை இரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு அனுமதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அரச துறையில் பணியாற்ற முடியாத வகையில் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊடகங்களுக்கு பல்கலைக்கழகங்கள் திறந்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget