Ads (728x90)

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 73 வயதான மூன்றாம் சார்லஸ், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

இவர் தனது முதலாவது மனைவியான இளவரசி டயானாவை 1996 ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். 1997 இல் வீதி விபத்தொன்றில் சிக்கி டயானா உயிரிழந்தார். அதனையடுத்து 2005 ஆம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் இரண்டாவது திருமணம் செய்தார்.

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏறிள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறவுள்ளார்.  

பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்லவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

Recent News

Recent Posts Widget