முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றும், இக்கட்சியில் பெயரும் கிராமமும் இல்லாத ஒரு சில பைத்தியக்காரர்களே இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன சிக்கலில் இருப்பதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் அழிக்கப்பட்டு, கட்சியின் கொள்கைகளும் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தனக்கு மக்கள் மற்றும் கட்சியின் கொள்கையே முக்கியம் என்றும், அதற்காகப் பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment