சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து நாமும், நாடும் புரிந்து கொள்ள முடியும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது அத்தியாவசியமான விடயம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
அந்த யோசனைக்கு இணங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் அதற்கான உடன்படிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்படும் பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பான நிபந்தனைகளை வெளியிடுமாறு அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஆனால் அந்த உடன்படிக்கைகளை இப்போது வெளியிடுமாறு கோரப்படுகின்ற போதிலும் அவர் அதனை ஏன் வெளியிடவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Post a Comment