Ads (728x90)

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சும் போட்டியிட்டனர். 

கடந்த இரண்டாம் திகதி நடைபெற்ற பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவில், எதிர்பார்த்தது போலவே லிஸ் டிரஸ் தேர்வு ஆனார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக்கை விட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு ஆனார்.

ரிஷி சுனக் 60 வாக்குகளும், லிஸ் டிரஸ் 81 வாக்குகளும் பெற்றனர். பிரதமராக தேர்வு ஆன பிறகு பேசிய லிஸ் டிரஸ் கடும் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். 

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போடியில் வெற்றி பெற்றதையடுத்து ராணி எலிசபெத்தை லிஸ் டிரஸ் சந்திக்க உள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத், லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு ஆனதை முறைப்படி அறிவிக்க உள்ளார். நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Post a Comment

Recent News

Recent Posts Widget