Ads (728x90)

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் இன்று பிற்பகல் காலமானார் என அரச குடும்பம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை கடந்த ஒக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளைக் கவனித்து வந்தார்.

இந்நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத் இன்று உயிரிழந்தார். இது பிரிட்டன் மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 09 இல் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Recent News

Recent Posts Widget