பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை மகளிர் அணி சார்பில் ஹர்சித சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஷ்க சஞ்சீவனி 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் நுஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
123 ஓட்டங்களை வெற்றி இலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணித் தலைவி பிஸ்மா மாரூப் 42 ஓட்டங்களையும், நிதா தார் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் இனோகா ரணவீர 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் நாயகியாக இனோகா ரணவீர தெரிவானார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இலங்கை இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது.
Post a Comment