இதனால் அடுத்த ஆண்டின் 6 மாதத்துக்குள் 2 இலட்சம் தனியார் துறையினர் பணிகளை இழப்பார்கள் என்று ஆய்வு மூலம் அறிய வந்துள்ளது.
மேலும் உலகில் பாதுகாப்புக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் இலங்கை 10ஆவது இடத்தில் இருக்கிறது. பாதுகாப்புக்காக வடகொரியா, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் வரவு – செலவு திட்டத்தில் அதிக நிதியை ஒதுக்குகின்றன.
இலங்கையும் அதிக நிதியை பாதுகாப்புக்காகவே ஒதுக்குகிறது என்றும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பணியாளர்களில் 18 வீதத்தினர் அரச பணியாளர்கள் என்றும், ஆசியாவின் மற்ற நாடுகளில் உள்ள அரசு பணியளார்களின் விகிதம் 10 வீதமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான பொருளாதார தரவுகளை குறிப்பிடும் கணக்கெடுப்பு அறிக்கையானது, நிதியமைச்சுடன் இணைந்து நாட்டில் உள்ள பிரபல தனியார் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Post a Comment