Ads (728x90)

புதிய சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான கட்டணங்கள், சாரதி உரிமத்தை  புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி உரிமத்தை புதிய சாரதி உரிமமாக மாற்றுவதற்கான கட்டணங்கள் யாவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் வழங்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரக் கட்டணங்களை திருத்தி அமைத்துள்ளார்.

புதிய வர்த்தமானியின்படி முதலாம் வகுப்பிற்கான அனுமதி மற்றும் புதிய சாரதி உரிமத்திற்கான விண்ணப்பம் சாதாரண சேவையின் கீழ் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், ஒருநாள் சேவையின் கீழ் 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ் 3 ஆயிரம் ரூபாயும், ஒரே நாள் சேவைக்கு 4 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாகன வகுப்புகளுக்கு, சாதாரண சேவைகளின் கீழ் கட்டணம் 3 ஆயிரத்து 500 ரூபாயும், ஒருநாள் சேவையின் கீழ் 4 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு வாகனத்திற்கு சாரதி உரிமச் செயல்முறைத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget