Ads (728x90)

அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதியில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற மற்றும் அடக்குமுறை என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் இருவரும் கைதிகளின் உடல்நிலையை அவதானிக்கச் சென்றதாகவும், கல்வெவ சிறிதம்ம தேரரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராக பொதுச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget