ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தெளிவானது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் அதற்கு இணங்குகிறது. அரசியல் வரப்பிரசாதங்களுக்காக எமது கொள்கைகளை காட்டிக்கொடுக்கவும் மாட்டோம் என அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பிளவுப் படாத நாட்டுக்குள், ஒருமைப்பாட்டை பாதுகாத்து, இறைமையை பாதுகாத்து செய்யும் அதிகார பகிர்வுக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
நாங்கள் ஒருபோதும் 13 பிளஸ் 13 மைனஸ் என்று கூறியது கிடையாது. அதேபோன்று 13ஐ கிழித்தெறியவும் நடவடிக்கை எடுத்ததில்லை.
ஆனால் மொட்டுக் கட்சியின் குழுவினரே வெளிநாட்டுக்கு சென்றால் 13 பிளஸ், நாட்டுக்குள் 13 மைனஸ் என்றும் கதைப்பவர்கள். ஆனால் நாங்கள் பலமான நிலைப்பாட்டில் இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் விசேட சர்வகட்சி கூட்டத்தை நடத்தி சுதந்திர தினத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இறுதித் தீர்மானத்திற்கு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
Post a Comment