Ads (728x90)

ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் நச்சுப்பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டத்தில் நேற்று முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் 23 ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் திருத்தச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget