Ads (728x90)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 

தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றம் தனது மனுவை நிராகரித்ததை அடுத்து சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த மற்றொரு குற்றவாளியான பேரறிவாளனை, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ன் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த மே 18ஆம் திகதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நளினியின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பேரறிவாளனின் வழக்கை மேற்கோள் காட்டி நளினி அதேபோன்ற நிவாரணம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget