Ads (728x90)

மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி டீசல் 1 லீற்றர் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 430 ரூபா என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மண்ணெண்ணெய் 1 லீற்றர் 25 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

எனினும் பெற்றோல் உள்ளிட்ட ஏனைய பெற்றோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


Post a Comment

Recent News

Recent Posts Widget