சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன், முன்னுரிமை அடிப்படையிலான வாகன பதிவுக் கட்டணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஒருநாள் சேவையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. தாமதமாகி செலுத்தப்படும் வாகன பதிவுக் கட்டணங்கள் மகிழுந்துக்கு நாளொன்றுக்கு 100 ரூபாவும், உந்துருளிக்கு 50 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுக் கட்டணம் 3,000 ரூபாவும், 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவுக் கட்டணமாக 25,000 ரூபாவும், 1600 சிசி மற்றும் 80 கிலோவொட்களுக்கு அதிகமான கார்களுக்கு பதிவுக் கட்டணமாக 40,000 ரூபாவும் செலுத்தப்பட வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் 2,000 ரூபாவும், மோட்டார் அம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சவப்பெட்டிகளுக்கு பதிவுக் கட்டணம் 10,000 ரூபாவும், விஷேட நோக்கத்துக்கான வாகனங்களுக்கான முதல் முறை பதிவுக் கட்டணம் 30,000 ரூபா எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment