பாராளுமன்றத்தில் நேற்று தேசிய பாடசாலைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தேசிய கல்வி கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இதன்படி 2023 -2033 ஆண்டுக்காக 10 வருட தேசிய கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாகக் கொண்டே கல்வி மறுசீரமைப்பு நடக்கும். ஆயிரம் தேசிய பாடசாலைகளில் தேசிய என்ற பெயர் குறிப்பிட்டு பயனில்லை. அவற்றை தேசிய மட்டத்திற்கு கொண்டு வர வேண்டும்.
தேசிய பாடசாலைகள் என்று பதாதைகளை போட்டவர்களிடம் அது தொடர்பான பிரச்சினைகளை கேட்டுக்கொள்ளுங்கள். அவை முதன்மை பாடசாலைகளாகும்.
1,200 பாடசாலைகள் திட்டத்தில் தற்போதைய தேசிய பாடசாலைகளும், உத்தேச தேசிய பாடசாலைகளுக்குமே முதன்மை பாடசாலை அந்தஸ்து வழங்கப்படும்.
இதன்படி அடுத்துவரும் வாரங்களில் மாகாண மட்டத்தில் உறுப்பினர்களை அழைத்து தயாரித்துள்ள கொள்கைத் திட்டத்திற்கு இணக்கப்பாடுகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment