Ads (728x90)

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக இருந்தால் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் அன்றாட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு, அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளீர்க்கப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மையப்படுத்தி பிரதான மூன்று விடயங்களை உடன் அமுலாக்குமாறு அரசாங்கத்தினைக் கோருவதென தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாணசபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 

ஆகிய மூன்று விடயங்களை முதற்கட்டமாக முன்வைப்பதென நேற்று நடைபெற்ற தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணின் தலைவர் விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன், சிறீதரன் கோவிந்தன் கருணாகரம், வினோதரலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget