Ads (728x90)

தேசிய அடையாள அட்டையை வைத்து இனி இலங்கை பிரஜை ஒருவரை அடையாளம் காணும் வகையில் தேசிய அடையாள அட்டை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரஜை ஒருவரை அடையாளம் காண்பதற்கு 15 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களின் சுய விபரங்கள், அவர்களின் உயிரியல் பண்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.

தேசிய தனிநபர் பதிவேட்டை மத்திய தரவு அமைப்பாக நிறுவுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்படும் தேசிய இலத்திரனியல் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வங்கி அல்லது நிறுவனத்துக்கு செல்லும் போது, அந்நபரின் தகவல்கள் தரவு அமைப்பில் இருந்தால் அவரின் முகத்தை ஸ்கேன் செய்து இலகுவாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget