Ads (728x90)

கத்தாரில் இன்று நடைபெற்ற 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஆர்ஜென்டீனா சம்பியனாகியது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹியூகோ லோறிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியை லயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி பெனல்டி முறையில்  4:2   கோல்கள் விகிதத்தில் வென்றது.

ஆர்ஜென்டீன அணி 3 ஆவது தடவையாக உலகக் கிண்ண சம்பியனாகியுள்ளது. இதற்கு முன் 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில்  ஆர்ஜென்டீனா சம்பியனாகியிருந்தது.

இடைவேளையின் போது ஆர்ஜென்டீனா 2:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது. ஆனால் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க. கிலியன் எம்பாப்பே கோல் அடித்தார்.

தொடர்ந்து பிரான்ஸின் உற்சாக ஆரவாரம் தணிவதற்குள் மறுநிமிடமே அதாவது 81 ஆவது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே பிரான்ஸின் இரண்டாவது கோலைப் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேர ஆட்டம் 2:2 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்ததால் மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தின் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை. 

அதன்பின்னர் 109 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸி கோல் ஒன்றைப் புகுத்தினார். இதனால் ஆர்ஜென்டீனா 3:2 விகிதத்தில் மீண்டும் முன்னிலையடைந்தது.  

ஆனால் 117 ஆவது நிமிடத்தில் பிரான்ஸிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிலியன் எம்பாப்வே 3 ஆவது கோலை அடித்தார். இதனால்  கோல் எண்ணிக்கை 3:3 விகிதத்தில் மீண்டும் சமநிலையடைந்தது.

மேலதிக நேர ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 3:3 விகிதத்தில் சமநிலையில் இருந்ததால் தலா 6  பெனல்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஆர்ஜென்டீனா 4:2 கோல்கள் விகிதத்தில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

இச்சுற்றுப்போட்டியின் மிகச்சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை லயனல் மெஸி வென்றார். அதிக கோல்களை அடித்த வீரருக்கான தங்கப்பாதணி விருதை பிரெஞ்சு வீரர் கிலியன் எம்பாப்வே  வென்றார். சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை  ஆர்ஜென்டீனாவின்  எமிலியானோ மார்ட்டினஸ் வென்றார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget