Ads (728x90)

நாட்டில் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ள 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பரிசோதனைகளுக்கு அமைய குறித்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற உணவு விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதிப்படைந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget