இச்சந்திப்பின் பின் முதல்வர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தூதுவருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டார். தமிழ் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் வெளிப்படையாக பேசினேன். இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது காலம் கடத்துவது பற்றி அவரிடம் பேசினேன்.
மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியா காரைக்கால் கப்பல் சேவை ஆகியன திட்டமிடப்பட்டபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தமிழ் மக்களினுடைய பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுவருகின்றமை தொடர்பில் அவரிடம் எடுத்து கூறினேன். அவர் ஒரு கோரிக்கையை என்னிடம் விடுத்தார். இங்கிலாந்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான இருதரப்பு நகர ஒப்பந்தங்களை செய்ய தாங்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே இரு நகர ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை இடைநிறுத்தி வைத்திருப்பதாக அவரிடம் தெரிவித்தேன்.
இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என தூதுவர் தெரிவித்ததாக முதல்வர் தெரிவித்தார்.
சகல விடயங்களையும் கேட்டறிந்த தூதுவர், அது தொடர்பில் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாக தெரிவித்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Post a Comment